ஸ்பிரிங்லீஃப் பிராட்டா பிளேஸ் உணவகம், 2003-இல் எஸ். வி. குணாளனால் நிறுவப்பட்டது. அதன் பிராட்டா வகைகளுக்காகப் பிரபலமானதோடு, உலகப்புகழ் பெற்ற மிச்செலின் வழிகாட்டியில் இடம்பெற்றுள்ளது. மேலும், பணியாளர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் இவ்வுணவகத்திற்குப் பெருமை சேர்க்கிறது.
தொடக்கத்தில் தி பிராட்டா பிளேஸ் என்று அறியப்பட்ட இந்த உணவகம் 2014-ஆம் ஆண்டில் ஸ்பிரிங்லீஃப் பிராட்டா பிளேஸ் எனப் பெயர்மாற்றம் பெற்றது. அருகிலுள்ள ஸ்பிரிங்லீஃப் சாலையின் பெயர் அடையாளமாக அமைந்ததே அந்த மாற்றத்திற்குக் காரணம். கடந்த 2012-இல் அல்டிமேட் ஹாக்கர் ஃபெஸ்ட் என்னும் அறக்கொடை உணவங்காடி நிகழ்வில் பங்கேற்ற பிறகுதான் இந்த உணவகம் பரவலாக அங்கீகாரம் பெற்றது. அங்கு அது நூதனமான அல்டிமேட் முர்தபாக்கை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, அவ்வுணவகம் பற்பல புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சிங்கப்பூர் முழுவதும் 11 கிளைகளைத் திறந்துள்ளது. மேலும், 2021-இல், Resorts World Las Vegas's Famous Foods Street Eats என்னும் பன்னாட்டு உணவுக் காட்சியில், ஆசியாவைப் பிரதிநிதிக்கும் 16 கடைகளில் ஒன்றாக அவ்வுணவகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதன் புதுவகை உணவு வகைகளுடன், பலதரப்பட்ட திறனாளர்களையும் உள்ளடக்கிய ஊழியரணியை உருவாக்குவதில் அவ்வுணவகம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. அதன் சமையலறையில் சுமார் 40 விழுக்காட்டினர் மாற்றுத்திறனாளிகள். ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 290,400 பிராட்டாக்களுக்கான மாவை உற்பத்தி செய்கிறார்கள். உணவகத்தின் 80% பிராட்டா மாவு தயாரிப்பில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். வருங்காலத்தில் அதனை 100 விழுக்காடாக மாற்றுவதை உணவகம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த லட்சிய இலக்கு, உணவின் உயர்தரம், புத்தாக்கம் ஆகியவற்றுடன் சுமுகமான பணிச் சூழலை வளர்ப்பதிலும் நிர்வாகத்திற்குள்ள உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஸ்பிரிங்லீஃப் பிராட்டா பிளேஸ் மிச்செலின் வழிகாட்டியில் 2019, 2023 என இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்றது ஒரு பிராட்டாக் கடைக்குத் தனிப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
மேல்விவரங்களுக்கு
“Our Outlets”. Springleaf Prata Place. Accessed on 1 August 2025. https://spplace.com/outlet
“S.V. Gunalan, Springleaf Prata Place,” MoneyFM 89.3, 15 November 2019. https://www.moneyfm893.sg/guest/s-v-gunalan-springleaf-prata-place/
Nazren, Fasiha. “Springleaf Prata Place went from Singapore to Las Vegas during a pandemic,” Mothership, 14 November 2021. https://mothership.sg/2021/11/springleaf-prata-las-vegas-interview/
“Springleaf Prata Place (Spring Leaf Garden)”. Michelin Guide. Accessed on 1 August 2025. https://guide.michelin.com/sg/en/singapore-region/singapore/restaurant/springleaf-prata-place
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |