கலைக்களஞ்சியத்தைப் பற்றி

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தின் (சி.த.க.) உருவாக்கத்திற்கு முன்னோடிகள் 2006-இல் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்க் கலைக்களஞ்சியமும் அதன் தலைமை ஆசிரியர் பேராசிரியர் டாமி கோவும். அத்தகையதொரு கலைக்களஞ்சியத்தின் பயன்பாடும் அதன் உருவாக்கத்திற்குத் தொண்டூழியர்களைத் திரட்டிய பேராசிரியரின் ஆற்றலும் கலைக்களஞ்சிய ஆலோசனைக் குழு உறுப்பினராக இடம் பெற்றிருந்த அருண் மகிழ்நனைப் பெரிதும் ஈர்த்தன. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தை மையமாகக்கொண்ட கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் சாத்தியம் குறித்து ஆராய அவர் முடிவு செய்தார். எனினும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே எழுதப்பட்ட கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது இன்றைய சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால், அதற்கு முதற்படியாகச் சமூகத்தைப்பற்றிச் சமூகமே எழுதலாம் என்னும் முடிவுக்கு வந்தார். மேலும், எளிதாக எல்லாரையும் சென்றடைய இணையவழிக் கலைக்களஞ்சியமாக இருப்பதே சாலச் சிறந்தது என்றும் முடிவெடுத்தார்.

அத்திட்டத்திற்கு அவர் தலைமையேற்றிருக்கும் சமூக அமைப்பான சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் (சி.த.ப.மை.) ஒப்புதலை முதலில் பெற்றார். பின்னர்ச் சி.த.ப.மை., கலைக்களஞ்சியத்தைத் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளத்தில் வெளியிடக்கோரி அதனை அணுகியது. நூலக வாரியமும் கலைக்களஞ்சியத்தை ஒரு சமூகத் திட்டமாகத் தயக்கமின்றி ஏற்று ஆதரவளிக்க முன்வந்தது.

சி.த.க., சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையையும் வரலாற்றையும் குறித்த முக்கியமான கூறுகளை ஆவணப்படுத்தும் கன்னி முயற்சி. சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகம் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று வளம் இன்றளவும் இல்லாத நிலையில், அப்பெரும் இடைவெளியை நிரப்ப, ஒரு வரலாற்றுப் பதிவேடாகவும் கல்வி வளமாகவும் மேற்கோள் தளமாகவும் விளங்குவதன்வழி, சி.த.க. முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.

மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், அரசாங்க அமைப்புகள், சமூக உறுப்பினர்கள், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆர்வமிக்கவர்கள் என அனைவரையும் சென்றடைவதே சி.த.க.-வின் குறிக்கோள்.

இக்கலைக்களஞ்சியத்தில், கலை, பண்பாடு, வரலாறு, கல்வி, பொருளாதாரம், ஊடகம், ஆளுமைகள், அமைப்புகள், அரசியல், அரசாங்கச் சேவை, சமயம், சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் உள்ளடக்கம், நூலக வாரியம் பின்பற்றும் முறைமையின்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சி.த.க. ஒரு தொடர்பணி என்பதை மனத்திற் கொள்ளவேண்டும். இது முழுமையானதோ அறுதியானதோ அன்று. ஒரு நீண்ட, ஒருபோதும் முடிவுறாத பயணத்தின் தொடக்கமாகவே, சி.த.க.-வின் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தலைப்புகளில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 

பதிவுகளை முடிவுசெய்யும்போது, அவற்றின் முக்கியத்துவம், கலைக்களஞ்சியத்தின் நோக்கத்திற்கு ஏற்புடைமை, கிடைக்கும் தகவல்களின் அளவு, அவற்றின் நம்பகத்தன்மை, தகவல்கள் அளிக்கும் அமைப்புகள் அல்லது தனிநபர்களின் ஒத்துழைப்பு ஆகிய அம்சங்கள் கருத்திற்கொள்ளப்பட்டன.

சி.த.க.-வின் உள்ளடக்கம் பெரும்பாலும் பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களிலிருந்தும் ஆதாரங்களிலிருந்தும் சில நேரங்களில் நேரடித் தொடர்புகளின் வாயிலாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கலைக்களஞ்சியத்தின் நம்பகத்தன்மை அந்த ஆதாரங்களின் துல்லியத்தைப் பொறுத்திருக்கிறது. இயன்றவரை, தகவல்கள் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

பதிவுகள் பெரும்பாலும் சுருக்கமாகவும் அடிப்படைத் தகவல்களுடனும் இருக்கும். தலைப்பைக் குறித்த அறிமுகமாக இருக்குமேயன்றி முற்றானதாக இராது. வாசகர், அப்பொருள் பற்றி மேலும் ஆராய நாங்கள் பெரும்பாலான பதிவுகளின் அடியில் மேற்கோள் குறிப்புகளையும் இணைப்புகளையும் கொடுத்திருக்கிறோம். ஒருசில பதிவுகள் சற்று நீண்டிருக்கும். காரணம், அப்பொருள்களைப்பற்றிய தகவல்களோ மேற்கோள் வளங்களோ பொதுவில் அதிகமாகக் கிடைக்கவில்லை என்பதே.

சி.த.க. இணையவழி மின்பதிப்பு என்பதால் அதில், அச்சுப்பதிப்புப் போலன்றி, தொடர்ந்து திருத்தங்கள் செய்யவும் இற்றைப்படுத்தவும் புதியனவற்றைச் சேர்த்துக்கொள்ளவும் முடியும். சி.த.க.-வை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் கருத்துகளையும் யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்களைத் தொடர்பு கொள்வதற்குரிய இணைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது. சமர்ப்பிப்புகள் அனைத்தையும் ஆசிரியர் குழு பரிசீலிக்கும்.

பரவலான வாசகர்களைச் சென்றடைவதையும் அவர்களுக்குப் பயனுடையதாக இருப்பதையும் உறுதிசெய்யச் சி.த.க. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகிறது. இரு பதிப்புகளிலும் உள்ளடக்கம் பெரும்பாலும் ஒன்றே எனினும் அவ்விரு மொழி வாசகர்களின் தேவைகளுக்கேற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நாங்கள் இக்கலைக்களஞ்சியத்தில், திரு., திருவாட்டி முதலிய விளிச்சொற்களைத் தவிர்த்துள்ளோம். ஆங்கிலத்தில் குடும்பப்பெயரையும் தமிழில் சுய பெயரையும் பயன்படுத்தும் மரபைப் பின்பற்றியுள்ளோம். ஆங்கிலத்தில், road, street, avenue, close, rise, walk, crescent எனப் புழங்கும் ஏராளமான சொற்களுக்கு ஏற்ற தமிழ் மொழிபெயர்ப்புகள் புழக்கத்தில் இல்லாத காரணத்தால், அத்தகைய பெயர்கள் அனைத்தையுமே ஒலிபெயர்ப்புகளாகத் தந்துள்ளோம். மேலும், அதிகாரத்துவ மொழிபெயர்ப்புகள் இல்லாத சொற்களுக்குத் தமிழில் ஒலிபெயர்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளோம். எனினும், வாசகர் அதன் மூல ஆங்கிலச் சொல்லைக் காண, டூல்டிப் என்னும் உதவிக்குறிப்புச் சாதனத்தை வழங்கியுள்ளோம். தேசிய நூலக வாரியம் இந்த வசதியை இக்கலைக்களஞ்சியத்தில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், சிங்கப்பூரின் 60-வது பிறந்தநாளின்போது, சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் நாட்டிற்கு வழங்கிய பரிசு.

 

- ஆசிரியர் குழு -

EST logo - tree
  • Share

மதியுரைஞர் குழு

முதன்மை மதியுரைஞர்

Tommy Koh

மதியுரைஞர்கள்

Jimmy Yap. ஹேமா கிருபழினி. Peter Schoppert.

 

ஆசிரியர் குழு

முதன்மை ஆசிரியர்

அருண் மகிழ்நன்

துணை ஆசிரியர்கள்

அழகிய பாண்டியன். சிவானந்தம் நீலகண்டன்.

 

திட்டக்குழு

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் திட்டக்குக்குழு மேலாளர்

செம்பியன் சோமசுந்தரம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் திட்டக்குக்குழு உறுப்பினர்கள்

இரணியன் வருண். பொன்மொழி செம்பியன். சண்முக சுந்தரம், வீ. சுப்ரமணியம், ந.

 

பங்களித்தோர்

இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த திட்டத்தில், சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்கிய தன்னார்வலர் குழு, சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடனும் தேசிய நூலக வாரியத்துடனும் இணைந்து பணியாற்றியது. மையம், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கத்தை உருவாக்கியது. வகைமைப்படுத்துதல், படங்களைச் சேர்த்தல், தரச்சோதனை போன்ற அம்சங்களில் வாரியம் தன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியது. தன்னார்வலர்களின் பட்டியல் கீழே.

 

Abhijit Nag. Tan Tin Wee. அகமது ஷா செய்யட் மஜுனூன். அகல்யா முத்துகுமாரசாமி. அரவிந்த் குமாரசாமி. அருண் வாசுதேவ் கிருஷ்ணன். அன்பரசு இராஜேந்திரன். ஆண்டியப்பன், நா. ஆழி செந்தில்நாதன். இந்திராணி. இராசகோபால் அன்பழகன். இராம நாச்சியப்பன். இராம வயிரவன். இராஜா கீதா. இராஜிக்கண்ணு, மா. இராஜேஷ் குமார் தர்மலிங்கம். இர்ஷாத் முஹம்மது. இலியாஸ். இளங்கோ அங்கம்மாள். இளஞ்சேரன், அ. இளவரசி ஸ்டீஃபன். இளவரசி, ம. இளவழகன் முருகன். இறை. மதியழகன். இன்பா, அ. உமா ஜெயராமன். ஐஸ்வர்யா தேவி அறிவழகன். கங்கா, பா. கலைவாணி அஷ்வின். கல்பனா பாலசுப்ரமணியம். கல்யாணி. கல்யாணி நாரயணன். கவிதா கிருஷ்ணன். கனகலதா, கி. காஞ்சனா வரதராஜலு. கார்த்திகேயன். காளியம்மாள். கிருத்திகா சிதம்பரம். கிருஷ்ணசாமி பவானி. கிருஷ்ணன் ஹரிஹர கஸ்தூரி ரங்கன். குணசேகரன். குணசேகரன், சி. குமரவேலு, ப. கோட்டி திருமுருகானந்தம். கோதா, கே.வி. கோபி கண்ணன். சசிகலா. சசிகுமார் பொன்னழகு. சஞ்சய் முத்துகுமரன். சத்தியமூர்த்தி கருப்பையா. சபனிதா சண்முகசுந்தரம். சம்பந்தம் மோகன். சலீம் ஹாதி. சாந்தி செல்லப்பன். சாந்தி ராமையன். சாந்தினி முத்தையா. சாமிக்கண்ணு, சி. சாரதா தேவி. சித்ரா சங்கரன். சித்ரா தணிகைவேல். சிவகுமாரன், ஆ.ரா. சிவகுமார், ஜெ. சீதா லட்சுமி. சுகுமார், ஈ. சுகுமாறன் நாயர். சுதா திவாகரன். சுந்தரவடிவேலன் செல்வம். சுப்பிரமணியம் நடேசன். சுப்பிரமணியம் விசுவலிங்கம். சுப்புலெட்சுமி, சி. சுப்பையா லெட்சுமணன். சுப்ரமணியன் கணேஷ். சுப்ரமணியன் முத்துமாணிக்கம். சுஜா செல்லப்பன். சுஷ்மா சோமசேகரன். சூடிக்கொடுத்தாள் கணேசன். செம்பியன் மீனா. செரீன் நபிசா, அ. செல்வராஜூ ராமாயி. செல்வா, க. செழியன் நந்தினி. செளந்தர நாயகி வயிரவன். சோபிதா, கு. சௌந்தரராஜன் சாத்தப்பன். தமிழரசி சுப்பிரமணியம். தனபால் குமார். தாரிணி அழகிரிசாமி. திண்ணப்பன், சுப. திமத்தி டேவிட். திரிசா தேவசஹாயம். தினகரன், ரா. தீபக் ஐயர். தீபன்ராஜ், பு. துரைராஜ் உமாமகேஸ்வரி. தெய்வ சுந்தரம், ந. தேவி விஜயன். தேவி வீரப்பன். தேன்மொழி d/o பழனியப்பன். நளினா கோபால். நாராயணன் ஆண்டியப்பன். நாராயணன், எஸ்,என்.வி. நாராயணன், என்.எஸ். நித்திஷ் செந்தூர். பவளகாந்தம் அழகர்சாமி. பழனியப்பன் சுந்தரராஜ். பழனியப்பன், ஆ. பன்னீர்செல்வம், செ. ப. பாண்டியன், வெ. பார்த்தசாரதி சங்கரன். பாலா, நா. பானுப்ரியா பாபு. பிச்சினிக்காடு இளங்கோ. பிரித்திகா கணேஷ். பிரெமிக்கா, மா. பிரேமா ராமலிங்கம். பீர் முகம்மது அக்பர். புகழேந்தி. புஷ்பலதா யாதவன். பெருமாள் அருமைச் சந்திரன். மகா தேவி. மகாதேவி பாலசுந்தரம். மகேஷ்வரி கிருஷ்ணசாமி. மகேஸ்வரி அம்மையப்பன். மணிமாலா மதியழகன். மணிமேகலை செல்வன். மதிவாணன், செ. மஹாலட்சுமி அமிர்தலிங்கம். மகேஷ் குமார். மாரியப்பன் அர்ச்சுனன். மீனாக்க்ஷி பழனியப்பன். மீனாட்சி, ச. முகம்மது அமீன் பின் சயட் அப்துல் காதர். முகம்மது சலீம், எச். முத்து நெடுமாறன். முருகப்பன். முஹம்மது அஸார். முஹம்மது இர்ஷாத். முஹிய்யத்தீன் அப்துல் காதர். மோகனப்பிரியா சந்திரசேகரன். மோனலிசா. யூசுப் ராவுத்தர் ரஜித் அகமது. ரமேஷ் செல்வராஜ். ரவி சர்மா. ரவி சிங்காரம். ரஸ்வானா பேகம். ராணி கண்ணா. ராதிகா ஜெயதேவ். ராமகிருஷ்ணன் கார்த்திகேயன். ராமு கருப்பையா. ராம், பி.ஓ. ராம்குமார் மோகன். ராம்சந்தர். ராஜசேகர், த. ராஜா முகமது மைதீன். ராஜாராம், ஆர். ரிஷி பாபு. லலிதா வைத்யநாதன். லிவிண்யா, பா. வரதராஜன், அ. கி. வரப்பிரசாத், என். விஜயகுமார் அருள் ஆஸ்வின். விஜயன் நம்பியார். விஜி ஜெகதீஷ். விஷ்ணு வர்தினி. வெங்கடேஷ் சாந்தி. வேணுகோபால் தங்கராசு. வேதகிரி, ஜீ. வைஷ்ணவீ ஆனந்த். ஜனார்த்தனன், கி. ஜெகன்னாத் ராமானுஜம். ஜெயந்தி சுவாமிநாதன். ஜெயராஜதாஸ் பாண்டியன், எஸ். பி. ஷண்முகம், க. ஷபிர் சுல்தான். ஷாநவாஸ். ஷாந்தா ரதி. ஷெரின் ஜீவிதா ஜோசப். ஸதக்கத்துல்லாஹ், க.ஹா.மு. ஹஃபிசா பீவி. ஹரிகிருஷ்ணன், மு. ஹரிணி, வி. ஹாஜி குத்தூஸ் s /o மீராசாஹிப். ஹேமங் நந்தபாலன் யாதவ். ஹேமலதா.

 

About the Encyclopedia

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல