கணேஷ் ராஜாராம் (பி. 1967) சிங்கப்பூரின் 13-ஆவது நாடாளுமன்றத்தில் 2016 முதல் 2018 வரை நாடாளுமன்ற நியமன உறுப்பினராகப் பணியாற்றினார். ஊடகத்துறையின் பல்வேறு கூறுகளில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர்.
அவர் கால்கரிப் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசாங்கத் துறையில் இளநிலைப் பட்டமும் மெக்குவாரிப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். பின்னர் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர்நிலை மேலாண்மைத்துறையில் பயிற்சி பெற்றார்.
கணேஷ்,1992-இல் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸில் ஒரு விளையாட்டு விமர்சகராகத் தமது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தக் காலக்கட்டத்தில், மலேசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அதுபற்றி நிறைய எழுதினார். மேலும் முன்னாள் செக் நாட்டுக் காற்பந்து வீரரும் சிங்கப்பூர்க் காவல்துறையிடமிருந்து தப்பியோடியவருமான மிச்சல் வானாவைப் ப்ராக் நகரில் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்கு வகித்தார். அடுத்து, 1994-ஆம் ஆண்டில், மீடியாகார்ப் நிறுவனத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராகச் சேர்ந்து, 2000 வரை பணியாற்றினார். பின்னர் 2010 முதல் 2016 வரை அப்போதைய ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மேலாண்மை உறுப்பினராகச் சேவையாற்றினார்.
கணேஷ், 2016-இல், தம் 49-ஆம் வயதில், நாடாளுமன்ற நியமன உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பேற்றதும், மின்னிலக்க யுகத்தில் சிங்கப்பூரின் ஊடகத் துறை செழிக்க வழியமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார். ஊடகத் துறைக்கு அப்பால், அவர் இன்னும் நான்கு நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களோடு இணைந்து, சிங்கப்பூர்க் கல்வித் துறையின் எதிர்காலம் பற்றிய கோரிக்கையை முன்வைத்தார். பள்ளி நேரடிச் சேர்க்கைத் தேர்வுமுறைகள், பள்ளி விளையாட்டுகளில் "DSA பயிற்றுவிப்பாளர்கள்" செலுத்தும் ஆதிக்கம் உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சினைகளையும் அவர் எழுப்பினார்.
கணேஷ், ஃப்ரீமண்டில் ஆசியா, லத்தீன் அமெரிக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2023-இல் பொறுப்பேற்றபோது, அவர் ஊடகத்துறையில் மேலும் ஓர் உச்சத்தைத் தொட்டதாகக் கூறலாம். நிறுவனத்தில் அவரது தலைமையின்கீழ் உருவான புதிய தொலைக்காட்சித் தொடர்களுக்கு உலகெங்கும் புதிய ரசிகர்கள் அதிகரித்தனர்.
மேல்விவரங்களுக்கு
Cheng, Kenneth. “Nine NMPs Selected.” Today Online, 17 March 2016. https://www.todayonline.com/singapore/nine-nmps-selected.
Whittock, Jesse. “Fremantle Names Ganesh Rajaram CEO In Asia And Latin America.” IMDb, 12 June 2022. https://www.imdb.com/news/ni63863795/.
“Ganesh Rajaram.” Parliament of Singapore. Accessed on 1 August 2025. https://web.archive.org/web/20160602215258/http://www.parliament.gov.sg/mp/ganesh-rajaram.
“PM Lee lauds NMPs' efforts in Parliament.” The Straits Times, 14 July 2018. https://str.sg/oQRo.
“Ganesh Rajaram Promoted to CEO, Asia and Latin America.” Fremantle, 6 December 2022. https://fremantle.com/news/ganesh-rajaram-promoted-to-ceo-asia-and-latin-america.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |