ரவீந்திரன் நாடகக் குழு 1988-ஆம் ஆண்டில், உள்ளூர்த் தமிழ் நாடகப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இளம் நாடக ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இளையர் நாடகக் குழு என்று அழைக்கப்பட்ட அது, பின்னர் நிறுவன உறுப்பினரான ஜி. ரவீந்திரனின் நினைவாக, ரவீந்திரன் நாடகக் குழு என மறுபெயரிடப்பட்டது. அவரது தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் குழுவுக்கு உள்ளூக்கத்தை அளித்தது.
தொடக்கக்காலத்தில் லாப நோக்கற்ற அமைப்பாகச் செயல்பட்ட குழு, சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை ஆராயும் சமூக நாடகங்களை அரங்கேற்றியது. நாடகத்தைப் பொழுதுபோக்குக் கலையாகமட்டும் கருதாமல், கல்வி, சமூக விமர்சனம், பண்பாட்டு அக்கறை ஆகியவற்றைக் கடத்தும் கருவியாகவும் குழு கருதியது. தமிழ் நாடகம் பரந்துபட்ட சிங்கப்பூர்ச் சூழலில், சமூகத்துடன் இணைந்து பரிணமிக்கவேண்டும் என்னும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டதால், ரவீந்திரன் நாடகக் குழு தன்னை வேறுபடுத்திக் காட்டியது.
மரபு சார்ந்த தமிழ் நாடக பாணிக்குச் சவால் விடுக்கும் வகையில் 1990-களில் எழுந்த புதிய தமிழ் நாடக அலையின் வெளிப்பாடாக ரவீந்திரன் நாடகக் குழு அமைந்தது. ‘பிளேக் பாக்ஸ்’ எனப்படும் சிறு நாடக அரங்குகள் வழியாக, சிந்திக்கவைக்கும் சமூக நாடகங்களைத் தயாரித்தது. மேற்கத்திய நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்த குழு, 2000, 2001-ஆம் ஆண்டுகளில் மெக்பெத் நாடகத்தை அரங்கேற்றியது. அதைத் தொடர்ந்து ஜே.பி. ப்ரீஸ்ட்லியின் அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ் என்ற நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான வந்தவன் யார் (2004) நாடகத்தை அரங்கேற்றியது. உலகளாவிய இலக்கியத்தை உள்ளூர் ரசனைகளுடன் கலந்து பிரதிபலித்த அந்நாடகங்கள் இருமொழி, இருபண்பாட்டுத் தலைமுறையினராக வளர்ந்துவரும் அடுத்த தலைமுறை நாடகப் படைப்பாளிகளை ஈர்த்தன.
தன்னார்வத் தொண்டர்களால் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டக் குழு, 2011-ஆம் ஆண்டில் நாடகத்தைத் தொழிலாகவும், நாடகத் திறன்களை தொழில்திறன்களாகவும் மாற்றும் நோக்கில் தனியார் நிறுவனமாகப் பதிவுசெய்தது. மேலும், தமிழ் மொழிக்கும் சமூகத்திற்கும் அப்பால் பரந்த, பல்லினப் பார்வையாளர்களை உருவாக்கும் நோக்கில், ஆங்கிலக் விளக்கவரிகளை வழங்குதல், பண்பாடுகளுக்கு இடையிலான கூட்டுமுயற்சிகளை வளர்த்தல், தமிழரல்லாப் படைப்பாளிகளைத் தயாரிப்புகளில் இணைத்தல் முதலிய முயற்சிகளில் இறங்கியது. ரவீந்திரன் நாடகக் குழுவால் 2013-இல் தொடங்கப்பட்ட பத்து நிமிடம் என்னும் தொடர், பிறமொழி நாடகக் குழுக்களைத் தமிழில் 10 நிமிட நாடகங்களை அரங்கேற்ற ஊக்குவிக்கும் குறுநாடக விழா. அத்தகைய நிகழ்ச்சிகள், பண்பாட்டு இடைவெளிகளை இணைக்கும் பாலமாகப் பலவகைப்பட்ட பார்வையாளர்களிடையே தமிழ் நாடகங்களைக் கொண்டுசேர்க்க உதவின.
ரவீந்திரன் நாடகக் குழுவின் பயணம் தொடர்ந்து பரிணாமவளர்ச்சி கண்டது. இளையர் குழுவாக 1980-களில் தொடங்கி, சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் கலையின் முக்கியமான அமைப்புகளுள் ஒன்றாக மாறியது. குழு தன் செயல்பாடுகளை 2010-களின் பிற்பகுதியில் நிறுத்திக்கொண்ட போதிலும், அதன் முன்னாள் மாணவர்களாலும் காப்பகத்தில் இருக்கும் அதன் படைப்புகளாலும் குழுவின் செல்வாக்கும் பாரம்பரியமும் நீடிக்கிறது. சிங்கப்பூரின் கலை வரலாற்றில், ரவீந்திரன் நாடகக் குழுவின் வரலாறு, மொழி, சமூகச் செயல்பாடு, கதை சொல்லல் ஆகியவை எவ்வாறு பண்பாட்டு அடையாளத்தை வடிவமைத்துக் கலாசாரங்களுக்கு இடையிலான புரிதலை வளர்க்கின்றன என்பதைக் காட்டுகிறது.
மேல்விவரங்களுக்கு
CNPLaw LLP. “Ravindran Ramasamy – Litigation, Arbitration, Criminal.” CNPLaw LLP. Accessed 1 June 2025. https://www.cnplaw.com/lawyer/ravindran-ramasamy/
Parliament of Singapore, Election of President of Republic of Singapore, vol. 80 of Parliamentary Debates: Official Report, 19 April 2005, cols. 121.
Parliament of Singapore, Election of President of Republic of Singapore, vol. 80 of Parliamentary Debates: Official Report, 16 January 2006.
Parliament of Singapore, Election of President of Republic of Singapore, vol. 78 of Parliamentary Debates: Official Report, 26 November 2004, cols. 1489.
“R. Ravindran,” The Straits Times, 1 October 1996, 24. (From Newspaper SG)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |