எம். ரவி என்று பொதுவாக அழைக்கப்படும் ரவி மாடசாமி (பி. 1969), மனித உரிமைகளுக்காகவும் LGBTQ+ உரிமைகளுக்காகவும் போராடும் வழக்கறிஞர். மேலும் மரண தண்டனைக்கு எதிராகவும் வாதாடுபவர்.
ரவி சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் அரசியல், அறிவியல், சமூகவியலில் இளநிலைப் பட்டம் பெற்றுப் பின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். அவர் 1996-இல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆறு ஆண்டுகள் கழித்து, மரணதண்டனை வழக்கு ஒன்றை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த வழக்குதான் பொது நலன் சார்ந்த சட்டத்திலும் அரசமைப்புச் சட்டத்திலும் அவரது ஆர்வத்தைத் தூண்டி, அத்துறைகளில் நிபுணத்துவம் பெறச்செய்தது. தொடர்ந்து, 2019-இல், அவர் எம். ரவி லா என்னும் சொந்தச் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார்.
சமயச் சுதந்திரம், வாக்களிக்கும் உரிமைகள், அரசமைப்புச் சட்டத்தில் கட்டாய மரண தண்டனைக்குரிய இடம் எனப் பல வழக்குகளில், ரவி பிரதிவாதிகளைப் பிரதிநிதித்துள்ளார். அவர் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுக்கும் பன்னாட்டுச் சட்ட அமைப்புகளுக்கும் இலவச ஆலோசகராகச் சேவையாற்றியுள்ளார். அண்மைய ஆண்டுகளில், அவர் வணிகத்துறையில் மனித உரிமைகள், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை தொடர்பான வழக்குகளிலும் அக்கறை காட்டத் தொடங்கினார்.
அவரது கொள்கைப் போராட்டங்களையும் இலவசத் தொண்டூழியங்களையும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல், பன்னாட்டு வழக்கறிஞர் சங்கம், மனித உரிமைகள் கண்காணிப்பு என்னும் அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. அவருக்கு 2023-இல் IBA மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.
இருப்பினும், அவர் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்துள்ளார். அவர் சட்டத்தை மீறியதற்காக, வழக்கறிஞராகப் பணியாற்றத் தடையும் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
ரவி, கம்போங் பாய் என்னும் தலைப்பில் தன்வரலாற்று நூலை எழுதினார். அது 2014-இல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது.
மேல்விவரங்களுக்கு
M. Ravi. Kampong Boy. Singapore: Ethos Books, 2013.
M Ravi Law. Accessed 1 August 2025. https://mravilaw.org/team/m-ravi/.
Lai, Linette. “Lawyer M. Ravi files constitutional challenge over TOC criminal defamation case.” The Straits Times, 12 December 2019. https://www.straitstimes.com/singapore/lawyer-m-ravi-files-constitutional-challenge-over-toc-criminal-defamation-case.
“M. Ravi.” Wikipedia. Accessed 1 August 2025. https://en.wikipedia.org/wiki/M_Ravi.
Lum, Selina. “Lawyer M. Ravi suspended for 5 years over ‘baseless’ allegations against Attorney-General, Law Society.” The Straits Times, 21 March 2023. https://str.sg/iZNP.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |