சாந்தா ரதி இனிஷியேட்டிவ்ஸ் என்னும் நடன அமைப்பு, வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு நோக்கத்துடன் 2016-இல் நிறுவப்பட்டது. குச்சுப்புடி, பரதநாட்டியம், கதகளி ஆகிய பாரம்பரிய நடனங்களின் அடிப்படைகளையும் அம்சங்களையும் சீன, மலாய், மேற்கத்திய நடன வகைகளுடன் இணைப்பதன்வழி, “ஆழ்ந்த வேர்கள் - அகன்ற தொடுவானம்” என்னும் தங்கள் அடிப்படைத் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதே அந்நோக்கம்.
நடனம் கற்பித்தல் நீங்கலாக, பல பண்பாடுகளைச் சேர்ந்த பல்வேறு கலைத்துறைகளையும் கூர்ந்து கவனித்து அவற்றின்மூலம் சுற்றுச்சூழல் சீரழிவு, பருவநிலை மாற்றப் பாதிப்பு என இன்றைய சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அமைப்பு முற்படுகின்றது. அன்றாட வாழ்க்கையில் அறத்தின் இன்றியமையாமை, பேரழிவு விளைவிக்கும் தொற்றுநோய், குறிப்பாக அவற்றால் பெண்களுக்கு ஏற்படும் அல்லல்களையும் கருத்தில் கொள்கிறது.
சிங்கப்பூரின் இளங் கலைஞர்களை அடையாளங்கண்டு உருவாக்குவதற்காக 2020இல் தொடங்கப்பட்ட‘ஸ்பார்க்ஸ்’ என்னும் திட்டம், மிகச் சிறந்த வழிகாட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக, பல நாடுகளில் நிகழ்ச்சிகளைப் படைத்து, நடனம் அமைத்து, வழிகாட்டியாக விளங்கும் அமைப்பு நிறுவனரும், கலை இயக்குனருமான சாந்தா ரதி, தாமே அத்திட்டத்தை வழிநடத்துகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தனிப்பட்ட முறையில் தாம் நடத்திய நடனக்கலை விளக்க நிகழ்ச்சிகள், விரிவுரைகள் ஆகியவற்றின்மூலம் அவர் பலவகைப்பட்ட நடனக்கலை ஆர்வலர்களை உருவாக்க முற்பட்டிருக்கிறார். இந்த அமைப்பின் முதன்மையான தொடர்புமொழி தமிழ் இல்லை. எனினும், தெலுங்கு, சமஸ்கிருதப் பாடல்களையே அதிகம் உள்ளடக்கிய குச்சுப்புடி நடனத்தின் இசையமைப்பில், சாந்தா ரதி தம் தனிப்பட்ட முயற்சியால் பல தமிழ்ப் பாடல்களை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் சிங்கப்பூர்த் தமிழ் நடன உலகிற்கும் பங்காற்றியிருக்கிறார்.
மேல்விவரங்களுக்கு
A celebration of love : Romantic Heroine in the Indian Arts. New Delhi, India : Lustre Press : Roli Books, 2004
Kothari, Sunil. Kuchipudi. New Delhi: Abhinav Publications, 2001 (Call No. q793.31954 KOT - [REC])
Ratii, Shantha. "The Romantic Nayika." A Celebration of Love, edited by Harsha V. Deheji, Roli Books in arrangement with Roli & Janssen, 2004
Shantha Ratii Initiatives. Accessed 1 August 2025. www.shantharatiiinitiatives.com
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |