லோயாங் துவா பெக் கோங் ஶ்ரீ மஹா கணபதி சந்நிதானம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

லோயாங் துவா பெக் காங் ஶ்ரீ மஹா கணபதி சந்நிதானம், 20 லோயாங் வேயில் அமைந்துள்ள, 1980-களில் நிறுவப்பட்ட பல்சமய வழிபாட்டுத் தலம். அது தாவோயிசம், பௌத்தம், இந்து ஆகிய சமயங்களின் கடவுள்கள், ஒரு முஸ்லிம் தர்கா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மகா கணபதி சன்னதி இந்து சமயத்தைப் பிரதிநிதிக்கிறது.

லோயாங் தொழிற்பேட்டையின் எல்லையில், 1980-களில், கடற்கரையில் சிதறிக்கிடந்த பௌத்த, இந்து, தாவோயிசக் கடவுள் சிலைகளை மீன்பிடி நண்பர்கள் குழு ஒன்று தற்செயலாகக் கண்டது. அவர்கள் தகரக்கூரை வேயப்பட்ட ஒரு சிறிய செங்கல் குடிசையைக் கட்டி, சிலைகளை வைத்து அதை ஒரு தற்காலிகக் கோவிலாக மாற்றினர். அக்கோவிலில், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் சீனச் சமூகங்களால் வணங்கப்படும் டத்தோ கோங்கை நா துக் கோங் என்றும் அழைக்கப்படுகிறது) கௌரவிக்கும் வகையில் குடிசையில் ஒரு தர்காவும் சேர்க்கப்பட்டது. கோவிலின் அற்புத சக்திகளால் பக்தர்கள் பலரும் வளம் பெருகுவதாகவும் தம் வேண்டுதல்கள் நிறைவேறியதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆலயம் ஏராளமானோரை ஈர்க்கத் தொடங்கியது.

முதலில் அமைக்கப்பட்ட குடிசை 1996-இல் தீக்கிரையானது. இருப்பினும், பொது நன்கொடைகள்மூலம், அதே இடத்தில் 1,400 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு புதிய கோவில் வளாகம் கட்டப்பட்டது. தீ விபத்தில் சேதாரமின்றித் தப்பிய துவா பெக் கோங்கின் நினைவாக அந்தக் கோவிலுக்குப் பெயர் சூட்டப்பட்டது. ஆலயத்திலுள்ள இரண்டு மீட்டர் உயரமுள்ள மகா கணபதி சிலை சிங்கப்பூரின் ஆக உயரமான கணபதி சிலை என்று கூறப்படுகிறது.

கோவில் அமைந்திருந்த இடத்தின் குத்தகை 2003-இல் காலாவதியானதைத் தொடர்ந்து, 2007-இல், லோயாங் வேயில் உள்ள அதன் தற்போதைய வளாகத்திற்கு இடமாற்றம் கண்டது. புதிய கோவில் கட்டப்பட செலவான மொத்தத் தொகை 12 மில்லியன் வெள்ளியும் பொது நன்கொடைகளாக வந்து சேர்ந்தது. இரவுபகலாக 24 மணி நேரமும் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும் அந்தக் கோவிலின் பிரபலமான வருடாந்திரக் கொண்டாட்டங்களில் சீனப் புத்தாண்டும் விநாயகர் சதுர்த்தியும் அடங்கும்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற லோயாங் துவா பெக் கோங் ஶ்ரீ மஹா கணபதி சந்நிதானத்தின் குடமுழுக்கு விழாவில், 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீ மகா கணபதியின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கும் 16 புதிய சிலைகள் சந்நிதானத்தில் சேர்க்கப்பட்டன.



மேல்விவரங்களுக்கு
“Discovering the Fascinating History of Loyang Tua Pek Kong Temple in Singapore.” Lionheartlanders, 10 March 2023. https://www.lionheartlanders.com/post/discovering-the-fascinating-history-of-loyang-tua-pek-kong-temple-in-singapore.
“Loyang Tua Pek Kong Temple.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/landmarks/Pasir-Ris-Heritage-Trail---Architectural-Highlights/loyang-tua-pek-kong-temple.
“Loyang Tua Pek Kong Temple: A Sacred Site for All Religions.” Singapore Infopedia. Accessed 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=b90972be-e38e-469d-9913-bf2b5ed5afe1.
“Loyang Tua Pek Kong & Vinayagar Temple, Singapore.” Light Up Temples, 10 December 2022. https://lightuptemples.com/en/loyang-tua-pek-kong-vinayagar-temple-singapore/.
Sin, Yuen. “Multi-Faith Loyang Tua Pek Kong Temple Welcomes All.” The Straits Times, 27 October 2017. https://str.sg/3sqN.

To read in English 

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA