நகைச்சுவை உணர்வோடும் உழைப்பின் உயர்வை மையக்கருத்தாகக் கொண்டும் எழுதப்பட்ட நாடக நூல் இது. திறமையும் உழைப்புமின்றி உயர்வை எதிர்பார்ப்பதால் ஏற்படும் ஏமாற்றங்களை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. போலியான ஆடம்பரம் உண்மை நிலையை மறைக்கும் திரையாக எப்போதும் பயன்தராது என்பதையும் குடும்பப் பாசம் கட்டிக்காக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறது இந்நாடக நூல்.