(ரேடியோ நாடகங்களின் தொகுப்பு) இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற பாரதத்தை உய்விக்க வந்த காந்தி மஹான் வாழ்க்கையை நாடக வடிவில் சித்தரிக்கும் நூல் இது! வானொலி மூலம் வாரா வாரம் பல்லாயிரக் கணக்கானோரை மகிழ்வித்த நாடகம் நூல் வடிவில் வந்துள்ளது. காந்திஜியின் தென்னாட்டு வருகையின்போது நடந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாடகம் இது! இந்த நூல் தொகுப்பில் மற்ற சில நாடகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாடகம் மூலமாக நற்பணி செய்ய விரும்புவோருக்கும் நாடகப் பிரியர்களுக்குமான நூல் இது!