இந்த பயண வழிகாட்டி சுற்றுப்பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும். சிங்கப்பூரின் வரலாறு, பூகோள அமைப்பு, விமான நிலையம், துறைமுகம், வெளிநாட்டு நாணயம் மாற்றும் விகிதங்கள், தூதராலயங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், தங்கும் இடங்கள், உணவகங்கள், கடை வீதிகள் போன்ற பல விவரங்கள் இந்த வழிகாட்டியில் உள்ளன.