இது 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. முதல் சிறுகதையின் தலைப்பாகிய தனிமரம் இந்நுாலுக்குத் தலைப்பாகவும் அமைந்துள்ளது. இந்திய சமூகத்தின் நடைமுறைச் சிக்கல்களை இச்சிறுகதைகள் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. முதியோர் நிலை, மணமாகாத பெண்களின் நிலை முதலியன குறிப்பிடத்தக்கவை.