ஹிந்து மதம் வெறும் தத்துவம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை! அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களை 27 அத்தியாயங்களில் இந்நூல் தெளிவாகத் தருகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமையை நாமங்கள் ஆயிரம் நலங்கள் பல்லாயிரம் கட்டுரையில் படிக்கலாம். சப்த சக்தி என்ன செய்யும், எண்ண சக்தி என்ன செய்யும், காயத்ரி மந்திரத்தின் பெருமை, அஷ்ட நிதிகளை அள்ளித் தரும் பத்மினி வித்யா உள்ளிட்ட அபூர்வ ரகசியங்களை இந்த நூலில் படிக்க முடியும்! இந்த நூலுக்கு முன்னுரை தந்துள்ளவர் முன்னாள் தமிழ் நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநரும் தமிழறிஞருமான திரு சு.ஸ்ரீபால் அவர்கள். அவர் தனது உரையில், “அன்பிற்குரிய நண்பர் திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விட சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.