கோமள விலாஸ்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

கோமள விலாஸ் உணவகம், முருகையா ராஜூவால் 1947-இல் தொடங்கப்பட்டது. குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டுவரும் இவ்வுணவகம், தென்னிந்தியச் சைவ உணவிற்குப் பல்லாண்டுகளாகப் பெயர்பெற்று விளங்குகிறது. சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இருவரும் ஒன்றாக உணவுண்ட கடை என்னும் புகழும் இதற்குண்டு.

இந்தியாவின் தஞ்சாவூரிலிருந்து, 1934-இல் தம் 14-ஆம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த முருகையா ராஜூ, அப்போது சிராங்கூன் ரோட்டில் செயல்பட்ட கருணானந்த விலாஸ் உணவகத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். தொழிலைக் கற்றுக்கொண்டவர், உணவக உரிமையாளர் 1947-இல் கடையை விற்றபோது 10,000 வெள்ளிக்கு வாங்கியதோடு, உரிமையாளருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவர்தம் மனைவியின் பெயரிலேயே கோமள விலாஸ் என்று பெயரை மாற்றிச் சொந்தத் தொழிலாகத் தொடங்கினார். உணவகம் 1950-களில், 76-78 சிராங்கூன் ரோடு முகவரியிலிருந்த இரண்டு மாடிக் கடைக்கு மாற்றப்பட்டது. 

அனுபவமிக்க சைவ சமையல் வல்லுநர்களை இந்தியாவிலிருந்து தருவித்துச் சுவையான சைவ உணவு படைப்பதற்குக் கோமள விலாஸ் பெயர்பெற்றது. முதல் கடை தவிர, அதே சாலையில் எண் 291 என்னும் முகவரியிலும் கோமள விலாஸ் செயல்படுகிறது. அப்பர் டிக்சன் ரோட்டிலுள்ள கோமள விலாஸ் கடையில் இனிப்புகள், நொறுக்குத்தீனிகள் விற்கப்படுகின்றன. 

கோமள விலாஸின் பொறுப்பை 1990-இலிருந்து நிறுவனரின் மகன் ராஜூ குணசேகரன் ஏற்றார். அவர் ஓய்வுபெற்ற பிறகு, 2015-இலிருந்து அவரது மகன் ராஜகுமார் குணசேகரன் பொறுப்பேற்றார். 

மூன்றாம் தலைமுறை உரிமையாளரான இவர், உணவு வகைகளில் வட இந்தியச் சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்தியதோடு, 2020-இல், 413 ரிவர் வேலி ரோடு முகவரியில் ஃபென்னெல் என்ற பெயரில் புதுவகை உணவுகளுடன் இந்தியச் சைவ உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். 

ராஜுவின் இன்னொரு மகன் ஆர்.டி. சேகர், இந்திய உணவுகளை துரித உணவகச் சாயலில் விற்பதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, கோமளா’ஸ் உணவகத்தை 1995-இல் அறிமுகப்படுத்தினார். 

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரைநூற்றாண்டு அரசநய உறவைப் போற்றும்வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2015-இல் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது, கோமள விலாஸில் பிரதமர் லீ சியன் லூங் அவருடன் உணவருந்தினார். ‘தோசை அரசநயம்’ என ஊடகங்கள் அதை வருணித்தன. லிட்டில் இந்தியா பகுதியின் மரபுடைமைத் தலங்களுள் ஒன்றாகக் கோமள விலாஸ் உணவகம் விளங்குவதால் சுற்றுப்பயணிகளையும் ஈர்த்துவருகிறது.



மேல்விவரங்களுக்கு
“Indian eatery serves fast food McDonald’s style,” The Straits Times, 28 August 1995, 3. (From Newspaper SG)
“Teck Kah,” New Nation, 17 May 1975, 7. (From Newspaper SG)
“About Us,” Komala Vilas. https://komalavilas.com.sg/about-us/
“Komala Vilas,” RootsSG. Accessed 11 June 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/landmarks/little-india-heritage-trail-shop-till-you-drop/Komala-Vilas 
“தெரு முனை மரபுடைமைக் கண்காட்சிக்கூடம்: லிட்டில் இந்தியா,” RootsSG. Accessed 11 June 2025. https://www.roots.gov.sg/stories-landing/stories/Street-Corner-Heritage-Galleries-Little-India-Tamil-translation

To read in English     

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA