[Read! Fest 2019] என் எழுத்துப் பயணம்: எழுத்தாளர்கள் அ.கி. வரதராசனுடனும் சித்ரா ரமேஷுடனும் / My Writing Journey with Authors, A K Varadharajan & Chitra Ramesh

 • Language: தமிழ்
 • Target Audience: Teens, Adults, 50 and above, Educators/Parents
 • Category: Heritage, Read, Singapore & S.E.A, Teens, Other Happenings
Availability: 91
Sun, 30 Jun, 2019, 11:00 AM - 12:30 PM (GMT+8)

National Library

Basement 1 - Programme Zone

100 Victoria Street National Library Board

Event Website
Find us also on

 • Language: தமிழ்
 • Target Audience: Teens, Adults, 50 and above, Educators/Parents

Loading tickets
Enter your promotional code: Apply Cancel

Add me to the waiting list

Please fill in the form below and we will get back to you as soon as there is a spot which frees up.

Thank you, Jonathan Easton

We have added you to our waiting list and you will be contacted as soon as a ticket becomes available.

Back to ticket listing

[Read! Fest 2019] என் எழுத்துப் பயணம்​: எழுத்தாளர்கள் அ.கி. வரதராசனுடனும் சித்ரா ரமேஷுடனும்
My Writing Journey with Authors, A K Varadharajan & Chitra Ramesh

30 June 2019, Sunday
11am to 12.30pm
Central Public Library,
Programme Zone, level B1,
National Library Building

This year, the sixth instalment of Read! Fest is anchored on the theme of Voyage. Book a trip with us and discover alternative forms of reading at Read! Fest 2019 programmes as we journey through space and time, only from 22 June – 28 July.

For more details, visit www.nationalreadingmovement.sg/readfest.

Synopsis:

இந்தச் சிறப்பு உரையாடல் தொடரில், சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்ற வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களான அ.கி. வரதராசனுடனும் சித்ரா ரமேஷும் தங்கள் எழுத்துப் பயணத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, சிங்கப்பூர் இலக்கியச் சூழல் கடந்த ஆண்டுகளில் கண்ட மாற்றங்கள் குறித்தும் அலசி ஆராய்வார்கள்.

In this special Conversations series, listen in as Singapore Literature Prize-winning writers from different generations share about their creative journey as a writer, as well as their thoughts on how the Singapore literary scene has changed over the years. Featured authors Chitra Ramesh, Fiction (Merit) & A K Varadharajan, Poetry (Merit) and Creative Non-fiction (Commendation) 2016, Poetry (Commendation) 2018.

 • Registration by writing in to Read@nlb.gov.sg
 • பெரியவர்களுக்கும் இளையர்களுக்கும் உகந்தது

  Suitable for adults and teens

 • Seats will not be reserved for latecomers.
 • Email Read@nlb.gov.sg for enquiries.
 • Waitlist information (see below)
Waitlist Information
Either
Should you be unable to attend this programme, please release your slot using the ‘self-cancellation’ function in the automated email. This will free up the slot for another person. There is no waitlist for this programme.
Or
If all slots are taken, please email Read@nlb.gov.sg to be on the waitlist. We will contact you only if a slot becomes available.

பேச்சாளர்: .கி.வரதராஜன்
Speakers: AK Varadharajan
 
அ.கி.வரதராஜன் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். ஆனாலும் இன்று சிங்கப்பூரில் இவர் அறியப்படுவது இவரது தமிழார்வத்தால்தான். தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் 1944ஆம் ஆண்டு பிறந்தவர். சிங்கப்பூரில் வேலையேற்க 1982இல் வந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக, சிங்கப்பூர் குடிமகனாக வாழ்ந்து வருகிறார். மரபுக் கவிதைகள் எழுதுபவர். இவரது மரபுக் கவிதை நூல்கள் சிங்கையில் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. கம்பனை ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள்  தமிழ்நாட்டிலுள்ள கம்பன் கழகங்களால் அவர்கள் நடத்தும் கம்பன் விழாக்களில் வெளியீடு கண்டு, அக்கழகங்கள் வழங்கும் பரிசுகளையும் விருதுகளையும் வரதராஜன் பெற்றுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக, இயக்கம், பாடலாக்கம், மேடை அமைப்பு, ஒட்டு மொத்த நிர்வாகம் எனப் பல பொறுப்புகளையும் ஏற்று இசை மற்றும் நாட்டிய நாடகங்களையும் இவர் மேடையேற்றி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக, கம்பராமாயண வகுப்புகளையும் வாரம் தோறும் வரதராஜன் நடத்தி வருகிறார்.
 
AK Varadharajan writes both Tamil classical poetry and prose. His prose for the present is focused on the epic written by Kamban. His three books on Kamban have won prizes from the three most prestigious Kamban Kazhakams in India – namely Karaikudi, Chennai and Pudhucheri. His fourth book on Kamban was launched at the Kamban Vizha in Colombo in 2018. His poetry book Singapore Naan Mani Malai won the merit award at the Singapore Literature Prize in 2016. His book on Lee Kuan Yew won the Singapore Tamil Writers Association Award in 2017.
 
பேச்சாளர்: சித்ரா ரமேஷ்
Speaker: Chitra Ramesh
 
சித்ரா ரமேஷ் வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவர். யுவபாரதி அனைத்துலகப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பொருளாளராகவும் துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது முதல் நூலான ‘நகரத்தின் கதை’ என்ற நூல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காக 2014ஆம் ஆண்டு பரித்துரைக்கப்பட்டது. ‘நகரத்தின் கதை’ நூல் 2014ஆம் ஆண்டு ஜீவானந்தம் இலக்கியக் குழு வழங்கிய சிறந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கான பரிசு பெற்றது. ‘ஒரு துளி சந்தோஷம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘ஆட்டோகிராஃப்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் 2018ஆம் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. ‘ஒரு துளி சந்தோஷம்’ என்ற சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது.

தேசிய கவிதைத் திருவிழா 2018ல் இதனை ஒட்டி நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். 2015, 2017, 2018 ஆண்டுகளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கு பெற்றார். 2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை ஒட்டி நடத்தப்பட்ட கவிதை வாசிப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு தேசிய கலைகள் மன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் கலந்து கொண்டுள்ளார்.
 
Chitra Ramesh is the President of Vasagar Vattam, a literary society promoting reading in Singapore. She is currently working as a teacher in Yuvabharathi International. She had been an executive member in   Singapore Tamil Writers Association for more than 18 years. Her books, Oru Thuli Santhosham (A Drop of Happiness) and Autograph were shortlisted for Singapore Literature Prize in 2018. She won the Singapore Literature Prize for her short story collection ‘Oru thuli santhosham’ (A drop of happiness) in 2018.

Her first book, Nagarathin Kathai, was shortlisted for the Singapore Literature Prize in 2014. The book also won prize in Thiruppur Jeevanandam literature prize in the year 2014. Her short story won the prestigious Golden Point Award in 2005 too.

She won the 2nd prize in the National Poetry competition 2018. Her poem has been short listed as one of the winning entries in the National poetry competition 2019. She has participated in the Singapore Writers Festival in 2015, 2017 and 2018 as a speaker and in poetry reading sessions too.

She has also conducted forum for National Arts Council about current trends in Tamil Literature in Singapore and about the changing trends in Tamil poems in Singapore.
 

Getting there:

This event is over. For more information, please contact the organiser