Visit

தமிழ்த்தொகுப்பு

நூலகத்தின் 9 ம் தளத்தில் உள்ளது.
புத்தகங்கள் எண்ணிக்கை
புத்தகங்கள் இருக்கும் நூலகக் குறி : லீ கொங் சியன் மேற்கோள் நூலகம்


தமிழ்த் தொகுப்பில் பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களும் 40 சஞ்சிகைகளும் உள்ளன. இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆ கிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் பொதுப்பிரிவு, மெய்யியல், சமயம், சமூகவியல், மொழியியல், அறிவியல், கலைகள், இலக்கியம், புவியியல், வரலாறு என எல்லாப் பிரிவுகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என எல்லாப் பிரிவினருக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தொகுப்பின் சிறப்பம்சம்

  • இலக்கியம்
  • மொழி
  • சமயம்
  • கலை

சமயம்:
இத்தொகுப்பில், சைவ, வைணவத் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்கள், இந்துக்கலாச்சாரம், குலதெய்வ வழிபாடுகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிய வரலாற்றுப் புத்தகங்கள், யோகம், போதனைகள், இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், இஸ்லாமியப் புத்தகங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்கள் அடங்கும்.

மொழி:
தமிழ் மொழி வரலாறு, சுவடி மொழிபெயர்ப்புகள், இலக்கண நூல்கள், அகராதிகள் போன்றவைஅடங்கும்.

கலை:
நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள், நாடக வரலாறு, மேடை நாடகம், கர்னாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துறையினரின் நினைவுகள், திரையிசைக் கலைஞர்களின் வரலாறு என்று பல தகவல்கள் அடங்கிய அரிய புத்தகங்கள் உள்ளன.

இலக்கியம்:
தமிழ்த் துறையின் முக்கிய அம்சமாக இப்பகுதி விளங்குகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அக்கால இலக்கியத்திலிருந்து இக்காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்ப்ட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், இலக்கிய வரலாறுகள், இலக்கிய ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சைவ வைணவ இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசனார், அறிஞர் அண்ணா மற்றும் அறிஞர் பலரின் இலக்கியப்படைப்புகள், மலேசிய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழிக்கதைகள், என்று பரந்த அளவில் படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆ ய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இவை ஒரு சிறந்த கருவூலமாக விளங்கும்.

மேலும் விவரங்களுக்கு Ask a Librarian என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்

Last Updated On 30 Sep 2019